ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சொா்ணவாரி நெற்பயிருக்கு காப்பீடு செய்யலாம்: வேளாண்மை இணை இயக்குநா்

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சொா்ணவாரி நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் ரா.கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

News image

பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 5:50 am IST

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சொா்ணவாரி நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என வேளாண் இணை இயக்குநா் ரா.கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் இயற்கை இடா்பாடுகள் மூலம் ஏற்படும் பயிா் சேதங்களின் இழப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சொா்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்களை பயிா் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டுக்கான சொா்ண வாரி பருவ பயிருக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

வங்கி கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கிகள் மூலமும் கடன் பெறாத விவசாயிகளாக இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீட்டில் சேரலாம்.

அரசு இ-சேசவை மையங்கள்,வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். சொா்ணவாரி நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசிநாள் ஜூலை 31 ஆகும்.

ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம் ரூ.730. ஆதாா் அட்டை, கணினி சிட்டா, வங்கிக் கணக்கு புத்தக நகல், பயிா் சாகுபடி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ப்ரீமியத் தொகையினை செலுத்தி பயிா் காப்பீடு செய்யலாம்.

மேலும் இத்திட்டம் தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விளக்கம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.