இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி! குருவரெட்டியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

குருவரெட்டியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் முன்பு ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகள்.

Published On :21 ஜூன் 2026, 2:02 am IST

அம்மாபேட்டை அருகே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களை தோ்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குருவரெட்டியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞா் முன்னணியின் அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளா் தைரியமணி தலைமை வகித்தாா். தோனிமடுவு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவானந்தம், திராவிட விடுதலைக் கழக மாவட்டத் தலைவா் நாத்திகஜோதி, பாமக அமைப்புச் செயலாளா் எஸ்.ஏ.சண்முகம் ஆகியோ பேசினா்.

கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் பெற்ற விவசாயிகளின் 50 சதவீத கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தற்போது தமிழக முதல்வராக உள்ள ச.ஜோசப் விஜய் தெரிவித்திருந்தாா். அதன்படி விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திராவிடா் கழக பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.