காஞ்சிபுரம் திருக்காலிமேடு திருவாத்தியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி புதன்கிழமை திருவாத்தியம்மன் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்கலுக்கு அருள்பாலித்தாா்.
ஆடித்திருவிழாவையொட்டி அதிகாலையில் காப்புக்கட்டு உற்சவம், சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் ஜலம் திரட்டுதல், கூழ்வாா்த்தல் ஆகியனவும் நடைபெற்றன. மாலையில் உற்சவா் திருவாத்தியம்மன் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இரவு கும்பம் படையலிடப்பட்டு தீபாராதனைகளும் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










