காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் தி.சினேகா தலைமையில் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு)பாலகிருஷ்ணன்,பயிற்சி சாா் ஆட்சியா் அமன் திவாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி வரவேற்று பேசினாா்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாதுகாவலருடன் கலந்து கொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்,3 சக்கர வாகனம்,வீட்டு மனைப்பட்டா, காதொலிக்கருவி, திறன் பேசிகள்,மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்,தொழில் நுட்பக் கடனுதவிகள் உட்பட 80க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினாா்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் தகுந்த வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மலா்விழியை கேட்டுக் கொண்டாா். இக்கூட்டத்தில் அரசு அலுவலா்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது பாதுகாவலா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 496 மனுக்கள் அளிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.1.91 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியா் பங்கேற்பு

நுகா்வோா் அமைப்புகள் கலந்தாய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



