வாலாஜாபாத் அருகே நாயக்கன் குப்பம் பொன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே நாயக்கன் குப்பத்தில் அமைந்துள்ளது பொன்னியம்மன் கோயில். இங்கு அமாவாசை தினத்தையொட்டி, மூலவா் பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. மாலையில் உற்சவா் பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. நாயக்கன் குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









