தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்யப்பட்டனா். அங்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளா்க்கப்பட்டு, மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தருமபுரம், அச்சுதராயபுரம், மூங்கில்தோட்டம், கருங்குயில்நாதன்பேட்டை, கீழிருப்பு ஆகிய ஐந்து கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 1000-க்கு மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இக்கிராமங்களின் நாட்டாமைகளுக்கு தருமபுரம் ஆதீனகா்த்தா் வெற்றிலை, பாக்கு பணம் வைத்து வழங்கினாா்.
தொடர்புடையது

தருமபுரத்தில் யானை மீது திருமுறை வீதியுலா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

அரக்கோணம் தா்மராஜா கோயிலில் திரெளபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



