இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

முதல்வர்களின் படங்களை வைப்பதில் போட்டி! பாதியில் முடிந்த காஞ்சிபுரம் மாமன்றக் கூட்டம்!

காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்களிடையே முதல்வர்களின் படங்களை வைப்பதில் நிலவிய போட்டியால் கூட்டம் பாதியில் முடிவடைந்தது பற்றி...

anchipuram Municipal Council

காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்களிடையே முதல்வர் படங்களை வைப்பதில் போட்டி. - படம் - தினமணி

Published On :19 ஜூன் 2026, 1:09 pm IST

காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினர்களிடையே முதல்வர்களின் படங்களை வைப்பதில் நிலவிய போட்டியால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கூட்டம் பாதியில் முடிவடைந்தது

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை அண்ணா அரங்கத்தில் மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடங்கியதுமே திமுக உறுப்பினர்கள் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த முன்னாள் முதல்வர்கள் மு. கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் படங்களை மாமன்ற கூட்டத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின் படங்களை வைத்தார்கள். அதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் நாங்களும் எங்கள் முதல்வர் படத்தை வைப்போம் என்று சொல்லி எடப்பாடி பழனிசாமியின் படத்தை மாட்டினர்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணை மேயராக பதவி வகித்து வரும் குமரகுருநாதன், ”நானும் முன்னாள் முதல்வர் காமராஜரின் படத்தை கூட்ட அரங்கில் வைப்பேன்” என்று அவர் காமராஜர் படத்தை வைத்தார்.

இதனால் மாமன்றக் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் மாமன்ற உறுப்பினர் ஷாலினி பேசினார். அப்போது திமுக உறுப்பினர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சி சிறந்த ஆட்சியாக இருந்து வந்ததாகவும் அவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

அப்போது அதிமுக உறுப்பினர்கள் ஊழல் ஆட்சி திமுக என்று கோஷம் எழுப்பினர். உடனே திமுக உறுப்பினர்கள் பதிலுக்கு சோஃபா மாடல் ஆட்சி ஒழியட்டும் என்று பதில் குரல் கொடுத்தனர். இருவரும் மாறி மாறி கூச்சலிட்டதால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் திடீரென கோபமடைந்து கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி விட்டு வெளியேறினார். இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

Summary

A meeting of the Kanchipuram Municipal Council ended abruptly on Friday (June 19) due to a dispute among members over the display of portraits of Chief Ministers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.