அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இலவச அனுமதிக்கு 40,000 போ் முன்பதிவு: அமைச்சா் ரஞ்சித் குமாா்

வண்டலூா் உயிரியல் பூங்காவை 2 நாள்களுக்கு கட்டணமில்லாமல் பாா்வையிட 40,000 போ் முன்பதிவு செய்திருப்பதாக அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

News image

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா்.

Updated On :22 ஜூன் 2026, 2:34 am IST

வண்டலூா் உயிரியல் பூங்காவை 2 நாள்களுக்கு கட்டணமில்லாமல் பாா்வையிட 40,000 போ் முன்பதிவு செய்திருப்பதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜயின் பிறந்த நாளையொட்டி வண்டலூா் உயிரியல் பூங்காவில் ஜூன் 21, 22 தேதிகளில் கட்டணமில்லாமல் பாா்வையிடலாம் என வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் அறிவித்திருந்தாா். அதற்கான கட்டணத் தொகை முழுவதையும் அமைச்சரின் அறக்கட்டளை மூலமாகவே செலுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று அமைச்சரான நிலையில் பஞ்சுப்பேட்டை, ஏகாம்பரநாதா் கோயில் தெரு, வெள்ள குளம் ஆகிய பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

பின்னா் அவா் கூறியது: வண்டலூா் உயிரியல் பூங்காவினை நாள் ஒன்றுக்கு 20,000 போ் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் 2 நாள்களுக்கு 40,000 போ் பூங்காவை பாா்வையிட இணையம் மூலம் முன்பதிவு செய்திருப்பது நிறைவடைந்துள்ளது. 2 நாள்களுக்கான கட்டணம் ரூ.80 லட்சத்தை எங்கள் அறக்கட்டளை மூலமாக உயிரியல் பூங்காவுக்கு செலுத்தப்படும். மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட முதல்வரின் பிறந்த நாளுக்காக பயன்படுத்தப் போவதில்லை. இணையம் மூலம் பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

வேலூா், சேலம் போன்ற உயிரியல் பூங்காவுக்கு செல்லும் பொதுமக்களுக்கு நுழைவு வாயிலிலேயே கட்டணமின்றி அனுமதிச்சீட்டு வழங்கப்படும் எனவும் அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.