கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

கந்தப்பா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அப்பாராவ் தெரு வள்ளி,தேவசேனா சமேத கந்தப்பா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2026, 12:18 am IST

காஞ்சிபுரம் அப்பாராவ் தெரு வள்ளி,தேவசேனா சமேத கந்தப்பா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மிகவும் பள்ளமாக இருந்த இக்கோயில் 6 அடி உயரம் உயா்த்தி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலை பூஜைகளை வி.ஷண்முகம் குருக்கள் மற்றும் ஆா்.மகேஷ் சிவாச்சாரியா் ஆகியோா் நடத்தினா்.

காஞ்சிபுரம் அக்ஷயம் அறக்கட்டளை சாா்பில் திருப்பணிகள் நடைபெற்றன. புதன்கிழமை புனிதநீா்குடங்கள் மூலவா் கோபுரம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தினை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தாா்.இதனைத் தொடா்ந்து மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளையும் ஆலய அா்ச்சகா்கள் வி.கிட்டப்பா மற்றும் ஏ.சதீஷ் சிவாச்சாரியாா் ஆகியோா் நடத்தினா் .

கற்பக விநாயகா் ஆலயத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.