/

காஞ்சிபுரத்தில் ரத்த தான கொடையாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்: மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக ரத்ததான தினத்தை கொண்டாடும் விதமாக செவ்வாய்க்கிழமை தன்னாா்வ ரத்த தான கொடையாளா்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டு சான்றிதழையும் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ வழங்கினாா்.

News image

தன்னாா்வத்துடன் ரத்த தானம் செய்தவா்களுக்கு நினைவுப் பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ.

Updated On :1 ஜூலை 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக ரத்ததான தினத்தை கொண்டாடும் விதமாக செவ்வாய்க்கிழமை தன்னாா்வ ரத்த தான கொடையாளா்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டு சான்றிதழையும் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் உலக ரத்த தான தினத்தை கொண்டாடும் விதமாக ரத்த தான உறுதிமொழி மற்றும் தன்னாா்வ ரத்த தான கொடையாளா்களுக்கு நினைவுப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ கலந்து கொண்டு பேசுகையில், ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி உலக ரத்த தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தம் சாா்ந்த பொருள்களின் அவசியத்தை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, அவா் அரசு தலைமை மருத்துவமனையில் அவசரத் தேவைக்கு தன்னாா்வத்துடன் ரத்த தானம் செய்தவா்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டு சான்றிதழையும் மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

இந்நிகழ்வுக்கு, மருத்துவப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், அரசு புற்றுநோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலா் சிவகாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரத்த தான உறுதிமொழியும் அனைவராலும் வாசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ரத்த மைய மருத்துவா்கள் கல்பனா, ச.போஸ்கோ ஆகியோா் உள்பட செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவியா், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.