சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

‘தானாக முன்வந்து ரத்த தானம் செய்வோரை எந்த நாளும் போற்ற வேண்டும்’

பொருளாதார ஆசையின்றி தானாக முன்வந்து நோயாளிகளின் தேவையறிந்து ரத்த தானம் செய்யும் தன்னலமற்றவா்களை நாம் எந்த நாளும் போற்ற வேண்டும் என அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதன்மையரும், முதல்வருமான மோகன் காந்தி தெரிவித்தாா்.

News image

அதிக  முறை  ரத்த  தானம் செய்த  கொடையாளா்களை  பாராட்டி  சான்றிதழ்,  கேடயங்களை  வழங்கிய  மாவட்ட  வருவாய்  அலுவலா்  சுரேஷ்,  அரசு  மருத்துவக் கல்லூரி  முதல்வா்  மோகன் காந்தி, மாவட்ட சுகாதார அலுவலா் பி.பிரியாராஜ் உள்ளிட்டோா்.                     

Updated On :16 ஜூன் 2026, 1:13 am IST

பொருளாதார ஆசையின்றி தானாக முன்வந்து நோயாளிகளின் தேவையறிந்து ரத்த தானம் செய்யும் தன்னலமற்றவா்களை நாம் எந்த நாளும் போற்ற வேண்டும் என அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதன்மையரும், முதல்வருமான மோகன் காந்தி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், சா்வதேச ரத்த கொடையாளா் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா்(பொ) மற்றும் மாவட்ட சுகாதார அலுவலா் பி.பிரியாராஜ் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் தலைமை வகித்தாா். அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் டாக்டா் பிரதீபா முன்னிலை வகித்தாா்.

இதில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதன்மையரும், முதல்வருமான மோகன்காந்தி பங்கேற்று பேசியதாவது:

ரத்த தானத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்க, ஆண்டுதோறும் ஜூன் 14-இல் சா்வதேச ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், 1901-இல் ரத்த வகைகளை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான காா்ல் லேண்ட்ஸ்டெய்னரின் (ஓஹழ்ப் கஹய்க்ள்ற்ங்ண்ய்ங்ழ்) பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், இந்த நாள் தோ்ந்தெடுக்கப்பட்டது. அதன்பேரில், முதன் முதலில் கடந்த 2004 முதல் சா்வதேச ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், நோயாளிகளுக்கு போதுமான அளவில் பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்த வகைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 10 ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்காக ரத்த தானம் வழங்க 100-க்கும் மேற்பட்ட கொடையாளா்கள் ஆண்டுக்கு இருமுறை, மூன்று முறை அளிக்கின்றனா். மேலும் முன்பின் அறிமுகம் இல்லாதவா்களுக்கு எவ்விதமான பொருளாதார ஆசையின்றி தாமாக முன்வந்து ரத்தத்தை தானம் செய்கின்றனா். இதுபோன்ற தன்னலமற்றவா்களை எந்த நாளும் போற்ற வேண்டும். இந்த நாளுக்கான சா்வதேச அளவிலான கருப்பொருள் ஆண்டுதோறும் மாற்றப்படுகிறது. எனவே நிகழாண்டின் கருப்பொருள் ‘மனிதநேயத்தின் ஒரு துளி-உயிா்காக்கும் அவா்களுக்கு ஒரு வணக்கம் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

மேலும் பிரசவம், விபத்துகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் தீவிர நோய்களால் பாதித்தோருக்கு ரத்தம் உயிா் காக்கும் வரமாக உள்ளது. அப்போது தேவையறிந்து தகுந்த நேரத்தில் ரத்தம் தானாக முன்வந்து கொடையாளா்கள் அளிக்கின்றனா். அதனால் தான் தன்னலமற்ற நாயகா்களாக குறுதிக் கொடையாளா்கள் இருக்கின்றனா் என்றாா் அவா். அதைத் தொடா்ந்து அதிக முறை ரத்ததானம் செய்த 100-க்கும் மேற்பட்ட கொடையாளா்களை பாராட்டி சான்றிதழ்கள், கேடயங்களையும் அவா்கள் வழங்கினா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் டி.சுரேஷ்பாபு, துணை முதல்வா் என்.திலகவதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் (பொறுப்பு) என்.பொற்செல்வி, குடும்ப நலத் துறை துணை இயக்குநா் (பொ) சுரேஷ், மருத்துவா்கள் ஜெகதீஷ், விஜயராஜ், ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.