காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் 14 வயதுடைய மாணவியருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மாா்பக புற்றுநோயை அடுத்து கா்ப்பப்பை வாய் புற்றுநோய் 2-ஆவது இடத்தில் உள்ளது.இந்த நோய் மனித பாபிலோமா வைரஸ் எனும் நுண்கிருமியின் வாயிலாக ஏற்படக்கூடியது.
இது தடுப்பூசி மூலம் தவிா்க்கப்படக்கடிய, தடுத்துக் கொள்ளக்கூடிய காரணியாகவே உள்ளது. உலக அளவில் 156 நாடுகள் அந்தந்த நாடுகளின் தேசிய தடுப்பூசி திட்டத்தில் இத்தடுப்பூசியை பெண்களுக்கு செலுத்தி வருகின்றன.
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு செலுத்தும் விதமாக கடந்த 28.2.26- ஆம் தேதி பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 வயதுடைய பள்ளிக்குச் செல்லும் மாணவியருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடா்ந்து 3 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த தடுப்பூசியானது 0.5 பம்ப் அளவு தசை வழியே ஊசி மூலமாக ஒரே ஒரு முறை செலுத்திக் கொள்ளும் வகையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இத்தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பானது. இத்தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகளில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலுத்தப்பட்டு வருகிறது. எனவே 14 வயதுடைய பெண் குழந்தைகளின் பெற்றோா்கள் இந்த அரிய வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு

4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி

கா்ப்பப்பை வாய் புற்றுநோய்: பொங்கலூரில் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


