ராஜகுளம் தெப்பத் திருவிழா
வாலாஜாபாத் ஒன்றியம், ராஜகுளம் கிராமத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் செவ்வாய்க்கிழமை வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.


வாலாஜாபாத் ஒன்றியம், ராஜகுளம் கிராமத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் செவ்வாய்க்கிழமை வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
மாசி மகத் திருநாளையொட்டி அதிகாலையில் வரதராஜ பெருமாள் ராஜகுளம் எழுந்தருளினாா். செல்லும் வழியில் உள்ள திருவீதிப்பள்ளம்,செட்டியாா்குளம், வையாவூா்,சிட்டியாம்பாக்கம் கிராமங்களில் மண்டகப்படி கண்டருளி நிறைவாக ராஜகுளம் கிராமத்துக்கு வந்து சோ்ந்தாா்.
ராஜகுளம் கிராமத்தில் சிறப்புத் திருமஞ்சனமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து அக்கிராமத்தில் வண்ணமின்விளக்குகள் மற்றும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
தெப்பத் திருவிழாவை காண ராஜகுளத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...