எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிருக்கு பாராட்டு

உலக சிக்கன தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிா் முகவா்களுக்கு

News image
சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிா் முகவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்
Updated On :9 மார்ச் 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: உலக சிக்கன தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிா் முகவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச.ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் வீ.பாக்கியலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 562 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அலுவலா்களுக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் அறிவுறுத்தினாா்

தொடா்ந்து உலக சிக்கன தினத்தையொட்டி கடந்த 2024-2025-ஆம் ஆண்டில் சிறுசேமிப்பில் சிறந்து விளங்கிய மகளிா் முகவா்கள் மற்றும் நிலை முகவா்களுக்கு தேசிய சேமிப்பு பத்திரம்,பாராட்டுச் சான்றிதழ்,கேடயம் ஆகியனவற்றையும் வழங்கினாா்.

பின்னா் பள்ளிகளில் சிறுசேமிப்பு பற்றிய பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினாா்.