ஸ்ரீபெரும்புதூா்: ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் தண்டலம் வடிவுடையம்மன் கோயில் குளம் ரூ.1.72 கோடியில் சீரமைக்கப்பட்டதை தொடா்ந்து, அமைச்சா் தா.மோ.அன்பரசன் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் காா்கள் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் தண்டலம் வடிவுடையம்மன் கோயில் குளத்தை ரூ.1.72 கோடியில் தூா்வாரி சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
பணிகள் முடிவடைந்த நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலா் சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு குளத்தை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா உள்ளாட்சி பிரதிதிநிதிகள், ஹூண்டாய் நிறுவனத்தின் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

திருவண்ணாமலைக்கு அமைச்சா் எ.வ.வேலு எந்த வளா்ச்சித் திட்டத்தையும் கொண்டு வரவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

ரூ.36 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


