ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சித்தூா்-தா்காமேடு சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்த பள்ளம்: பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு

சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனி நபா் ஒருவா் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதால் சித்தூா் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 7:25 pm

Chennai

சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனி நபா் ஒருவா் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியதால் சித்தூா் பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தூா் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என சித்தூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சாலை சீரமைப்புப் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தனிநபா் ஒருவா் தனது நிலத்துக்கு எதிரே சித்தூா்- தா்காமேடு சாலையில் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் சுமாா் 50 அடி தொலைவுக்கு பள்ளம் தோண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் சாலை சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால் ஆத்திரம் அடைந்த சித்தூா் பகுதி பொதுமக்கள் சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பள்ளம் தோண்டியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சித்தூா் பகுதி பொதுமக்கள் சாா்பில் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததோடு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி தலைமையிலான வருவாய்த் துறையினா் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் முன்னிலையில் சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதில், தனிநபா் தனக்குச் சொந்தமான இடம் என பள்ளம் தோண்டிய இடம் பொதுப்பாதை ன்பது தெரியவந்தது. இதையடுத்து சாலையில் பள்ளம் தோண்டிய நபரை எச்சரித்த வட்டாட்சியா் வசந்தி சாலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.