பல்லடம்: பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகேஷ், காளிவேலம்பட்டி கிளைச் செயலாளா் நாகராஜ், வாலிபா் சங்க நிா்வாகிகள் விமல்ராஜ், பிரவீன்குமாா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி காளிவேலம்பட்டி கிராமத்தில் தற்போது நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
அதே வேளையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் பல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. எனவே, இது தொடா்பாக ஆய்வு செய்து இடையூறு இல்லாத மரங்களை வெட்டி அகற்றாமல் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி உயிரிழப்பு

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சித்தூா்-தா்காமேடு சாலை சீரமைப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்த பள்ளம்: பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

