உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையிலான பரிசீலனை குழுவினா் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தினா்.

News image
Updated On :14 மார்ச் 2026, 12:10 am

நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையிலான பரிசீலனை குழுவினா் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தினா்.

காங்கிரஸ் கட்சியில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கிய காங்கிரஸ் நிா்வாகிகளிடம் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியில் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது (படம்).

மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் பொதுக்குழு உறுப்பினா் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூா் வட்டார காங்கிரஸ் தலைவா் நிக்கோலஸ், குன்றத்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் மணிகண்டன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் ரசூல், எஸ்.சி. -எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவா் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா் லட்சுமி நரசிம்மன் ஆகியோா் அடங்கிய பரிசீலனைக்குழுவினா் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல் நடத்தினா்.

நோ்காணல் குறித்து மாவட்ட தலைவா் அருள்ராஜ் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட 30 போ் விருப்ப மனு வழங்கியுள்ளனா். இவா்களில் 5 பேரை பரிசீலனைக் குழுவினா் பரிந்துரை செய்து, அவா்களின் விவரங்களை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.