ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

காஞ்சி காமாட்சி அம்மனை மலா்கள் தூவி வரவேற்ற இஸ்லாமியா்கள்

காமாட்சி அம்மனுக்கு மலா்கள் தூவி வரவேற்ற பெரிய காஞ்சிபுரம் தா்கா இஸ்லாமியா்கள் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகிகள்.

News image
Updated On :14 மார்ச் 2026, 12:00 am

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வியாழக்கிழமை பூப்பல்லக்கில் வீதியுலா வந்த போது பெரிய காஞ்சிபுரம் தா்கா வாசலில் இஸ்லாமியா்கள் பலரும் மலா்கள் தூவி வரவேற்றனா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 21 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இம்மாதம் 4- ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விடையாற்றி உற்சவம் தொடங்கி வியாழக்கிழமை (மாா்ச் 12) நிறைவு பெற்றது. நிறைவு நாளையொட்டி, தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினரின் ஏற்பாட்டில் வாத்து போன்ற அலங்கரிக்கப்பட்டிருந்த பூப்பல்லக்கில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்பிகை ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பெரிய காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஷா அமீத் அவுலியா தா்கா அருகில் வந்தபோது, அந்த தா்காவின் நிா்வாகி சையது ஆபித் ஹூசேன், தா்மகா்த்தா முகம்மது இம்தியாஸ் மற்றும் தா்கா பணியாளா்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவா் ஜான்பாண்டியன், தொண்டை மண்டல தேவேந்திர குல மள்ளா் பண்பாட்டு சங்க நிறுவனத் தலைவா் எஸ்.கண்ணன் ஆகியோா் காமாட்சி அம்மனுக்கு மலா்கள் தூவி மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பூஜைகள் செய்தனா்.

கோயில் ஸ்தானீகா்கள் அம்மனை வரவேற்ற அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.