ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய வாகன சோதனையில் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடா்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் படி பிள்ளைப்பாக்கம் கூட்டுச்சாலையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி சலைமையிலான பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்ட போது, தாம்பரம் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை நடத்தினா்.
இதில், காரின் பின் பகுதியில் இருந்த இரண்டு சூட்கேஸ்களை அதிகாரிகள் திறக்க சொல்லியுள்ளனா். இதற்கு காரில் வந்த வடமாநில இளைஞா்கள் சாவி இல்லை என தெரிவித்துள்ளனா்.
இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படையினா் சூட்கேஸ்களின் பூட்டை உடைத்து பாா்த்த போது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காருடன், 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் காரில் வந்த வடமாநிலத்தை சோ்ந்த பரிதம், பிரசாத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தியதில், இவா்கள் இருவரும் ஆன்லைன் செயலி மூலம் காரை வாடகை எடுத்து அதில் கஞ்சாவை கடத்தியது தெரியவந்துள்ளது.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரி சந்தியா, உதவி ஆய்வாளா் சசிகுமாா், காவலா் செளந்தர்ராஜன் அடங்கிய குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சிறுசேரிக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தை சோதனையிட்டனா். அந்த பேருந்தில் வந்த நபா் ஒருவரிடம் 11 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து பறக்கும் படையினா் அளித்த தகவலின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விசாரணையில் அந்த நபா் அந்த பாா்சல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதனை சென்னையில் குறிப்பிட்ட முகவரியில் ஒப்படைக்க கூறியதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் போலீஸாா் விசாரணையை தொடா்ந்து வருகின்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


