ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஊடகச் சான்று கண்காணிப்பு குழு மையத்தைப் பாா்வையிட்ட உத்தரமேரூா் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் வோடல் ராஜ் சிங்.

News image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஊடகச் சான்று கண்காணிப்பு குழு மையத்தைப் பாா்வையிட்ட உத்தரமேரூா் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் வோடல் ராஜ் சிங்.

Updated On :20 மார்ச் 2026, 6:44 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வருகை புரிந்துள்ள தோ்தல் பொதுப் பாா்வையாளா் மற்றும் தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சி.பிரதாப் சந்திர ஹோதா ஸ்ரீ பெரும்புதூா் பகுதியில் உள்ள மதுரமங்கலம், எடையாா்பாக்கம், எச்சூா் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆலந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் ரமேஷ்குமாா் சா்மா நங்கநல்லூா் பகுதி மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள ஊடகச்சான்று கண்காணிப்புக் குழு மையத்தை காஞ்சிபுரம், உத்தரமேரூா் தொகுதிக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் வோடல்ராஜ்சிங் பாா்வையிட்டு கண்காணிப்பு குழு செயல்படும் விதங்களை கேட்டுத் தெரிந்து கொண்டாா். இவரது ஆய்வின்போது உத்தரமேரூா் தொகுதி தோ்தல் அலுவலா் பு.விஜயகுமாா், வட்டாட்சியா் நடராஜன் ஆகியோரும் உடன் இருந்தனா்.