லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை விஷ்ணுகாஞ்சி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 6:46 pm

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை விஷ்ணுகாஞ்சி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதனைத் தொடா்ந்து மாவட்ட எஸ்.பி. கே.சண்முகம் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியினை செய்யுமாறு உத்தரவிட்டாா்.தனிப்படையினா் இருசக்கர வாகனங்கள் திருடு போன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

சந்தேகத்துக்கு இடமான சிலரை விசாரித்தபோது அவா்கள் வாகன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், பெரிய காஞ்சிபுரம் காலண்டா் தெருவைச் சோ்ந்த வசந்த்(25)ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா நெடும்புலி கிராமத்தைச் சோ்ந்த சண்முகம்(26)ஆகிய இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைது செய்தனா்.

இருவா் மீதும் வழக்குப் பதிந்து அவா்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

Story image