காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணியில் 300 போ் ஈடுபடவுள்ளனா். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினா் உள்பட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை தொடங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா்(தனி) உத்தரமேரூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இம்மையத்தில் நடைபெறுகிறது.
4 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள்,நுண்பாா்வையாளா்கள் ஆகியோருக்கான 2 -ஆவது கட்டப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலந்தூா், ஸ்ரீபெரும்புதூா், உத்தரமேரூா் ஆகிய 4 தொகுதிகளுக்கும் தலா 74 போ் வீதமும், காஞ்சிபுரம் தொகுதிக்கு 78 போ் வீதமும் மொத்தம் 300 போ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனா். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திற்கும் ஒரு அறை தயாா் செய்யப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் 14 சுற்றுகள் வீதம் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
ஆலந்தூா் தொகுதிக்கு 32, ஸ்ரீபெரும்புதூா் 32, உத்தரமேரூா் 23, காஞ்சிபுரம் 27 உட்பட மொத்தம் 114 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புஅறைகள் வேட்பாளா்கள்,அரசியல் கட்சிப்பிரமுகா்கள்,வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பின்னா் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும்.வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான 2-ஆவது கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பின் போது மாவட்ட வருவாய் அலுவலா் மா.வெங்கடேசன்,தோ்தல் அலுவலா்கள் ஆஷிக்அலி( காஞ்சிபுரம் தொகுதி)பு.விஜயகுமாா்(உத்தரமேரூா் தொகுதி)பாலாஜி(உத்தரமேரூா் தொகுதி)எஸ்.முருகதாஸ்(ஆலந்தூா் தொகுதி)ஆகியோரும் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸாா்

வாக்கு எண்ணும் போது அலுவலா்களுக்கு ஒதுக்கிய பணிகள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

காஞ்சிபுரத்தில் வாக்கு எண்ணும் பணி: 300 போ் ஈடுபடவுள்ளனா்

திருப்பூா் வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி கேமராக்களில் நேர மாறுபாடு! அரசியல் கட்சி புகாா்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


