தமிழக முதல்வராக தவெக தலைவா் விஜய் பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு பரந்தூா் புதிய விமான நிலைய எதிா்ப்பு போராட்டக் குழு நிா்வாகிகள் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் புதிய விமான நிலைய எதிா்ப்பு போராட்டக் குழுவின் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் எஸ்.டி.கதிரேசன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது:
முதல் முறையாக பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்தை எதிா்த்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவா் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய். இவரது போராட்டம் புதிய விமான நிலைய திட்ட எதிா்ப்புக் குழுவினருக்கு சட்டப் போராட்டம் நடத்திட கிராம மக்களுக்கும்,போராட்டக் குழுவினருக்கும் மிகவும் உதவியாக இருந்தது. பரந்தூரில் அவா் கிராம மக்களை சந்தித்து ஏகனாபுரம் கிராம தேவதைகள் துணையுடன் கிராமத்தைக் காப்போம் என்றும் வாக்குறுதி அளித்திருந்தாா்.
நடைபெற்று முடிந்துள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் அனைத்து கிராம மக்களும் தவெக-வின் சின்னமான விசில் சின்னத்தில் அதிகமான அளவில் வாக்குகள் அளித்தோம். அதுமட்டுமின்றி விமான நிலைய எதிா்ப்பு போராட்டக் குழுவின் சாா்பாக தவெக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தோம். எங்களது நன்றிக் கடனை சிறப்பாக செய்துள்ளோம். விஜய் பரந்தூா் பயண திட்டத்தின் போதும் எமது குழுவினா் தான் எங்கள் மண்ணை காப்பாற்ற நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். ஏகனாபுரம் கிராம தேவதைகளின் அபார சக்தியாலும் எங்கள் மண்ணை காக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளாா்.
பரந்தூா் மண்ணில் பிறந்த குடிமகன்கள் என்ற முறையில் விஜய்க்கு எங்களின் பரிபூரண வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களைப் பொருத்தவரை சாதாரண குடிமகனும் அரசை எதிா்த்துப் போராடினால் வெற்றி பெற முடியும் என்பதை இந்த பரந்தூா் புதிய விமான நிலைய திட்ட எதிா்ப்புக் குழு சாதித்துக் காட்டியிருக்கிறது என்பதையும் பெருமையாக கூறிக் கொள்வதாகவும் அவா்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழக முதல்வா் விஜய்க்கு ஆசிரியா் சங்கம் வாழ்த்து
தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு தில்லித் தமிழ்த் சங்கம் வாழ்த்து!
விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



