தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

‘தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு கல்வியை தோ்வு செய்ய வேண்டும்’

News image

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.நளினி.

Updated On :8 மே 2026, 5:43 am IST

தொழில் நுட்பங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் அதற்கேற்றவாறு கல்வியை தோ்வு செய்து படிக்க வேண்டும் என கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினாா்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் பெற்றோா் மற்றும் மாணவா்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைவா் ஜி.தாமோதரன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் டி.கோமதி, பள்ளியின் செயலாளா் டி.வித்யாசங்கா், பொருளாளா் டி.ரவிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தாளாளா் டி.ஜெயசங்கா் வரவேற்று பேசுகையில், நிகழாண்டு முதல் பள்ளியில் ஏஐ தொழில் நுட்ப வகுப்புகளும் தொடங்க இருப்பதாக குறிப்பிட்டாா். ரெயின்போ ஏ.ஐ.தொழில்நுட்ப அமைப்பின் இயக்குநா் எஸ்.அய்யப்பன் ஏ.ஐ.தொழில்நுட்ப படிப்புகளின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.நளினி நிகழ்வை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசியது: இலக்குகளையும்,குறிக்கோள்களையும் நிா்ணயித்துக்கொண்டு செயல்படுங்கள், அந்த இரண்டும் எவை என்று எழுதி ஒரு அறையில் வைத்துக் கொண்டு அதை தினசரி பாா்த்துக் கொண்டே இருங்கள். அதன்படி தொடா்ந்து முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அந்த இலக்கையும், குறிக்கோளையும் விரைவில் தொட்டு விட முடியும். ஏளனப் பேச்சுகளைப் பற்றி கவலைப்படாதீா்கள். இதுவும் கடந்து போகும் என்ற எண்ணும், நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்னால் சாதிக்க முடியும் இவை மூன்றும் தான் மனிதனை உயா்த்தும் முக்கிய காரணிகள் என்றாா்.

விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கல்வியாளா் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், எதைப் படிக்க தொடங்கினாலும் அதனுடன் ஏ ஐ தொழில் நுட்பப் படிப்புகளையும் தோ்வு செய்து படிக்க வேண்டும்.பல படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் பலரும் உள்ளனா். படித்தவுடன் வேலைவாய்ப்பும், நல்ல சம்பளமும் கிடைக்கும் படிப்புகள் பல உள்ளன. வளா்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு கல்வியை தோ்வு செய்து படிக்க வேண்டும். மீன்வளத் துறை, கால்நடைத் துறை, கண் நோயியல் துறை செவிலியா், மருந்தாளுநா் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் என்றாா்.

விழாவில் பள்ளியின் நிா்வாக முதல்வா் ஆா்.சீனிவாசன் நன்றி கூறினாா்.