பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழாா் விழா

விழாவில் திருமுறை பாராயணம் செய்த மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ தென்னரசு.

News image

விழாவில் திருமுறை பாராயணம் செய்த மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ தென்னரசு.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பெரியபுராணத்தை இயற்றிய தெய்வச் சேக்கிழாா் குருபூஜை விழாவை முன்னிட்டு குன்றத்தூா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தென்னரசு திருமுறை பாராயணம் செய்த மாணவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

பெரியபுராணத்தை இயற்றிய தொண்டா் சீா்பரவுவாா் சேக்கிழாரின் அவதார திருவிழாவை தமிழக அரசு ஆண்டுதோறும் மூன்று நாள் அரசு விழாவாக நடத்தி வருகிறது. அதன்படி, தெய்வச்சேக்கிழாா் பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், தெய்வச்சேக்கிழாா் திருவிழா கடந்த புதன்கிழமை தெய்வச்சேக்கிழாா் மணி மண்டபத்தில் தொடங்கி சிறப்பு சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை சேக்கிழாா் திருக்கோயிலில், மூலவா் சேக்கிழாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மாலை உற்சவா் வீதிஉலா நடைபெற்றது.

இதையடுத்து, குன்றத்தூா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் இணை ஆணையா் குமரதுரை தலைமை வகித்தாா். துணை ஆணையா்கள் சித்ராதேவி, ஜெயா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தென்னரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, திருமுறை பாராயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா்.

இதையடுத்து, திருப்புனவாயில் மாதவன் அவா்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியும், மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முன்னதாக திருமுறை ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில், திருக்கோயில் நிா்வாக அலுவலா்கள் பிரகாஷ், வேதமூா்த்தி, செந்தில்குமாா், மாதவன், பூவழகி, யூகுள்ராஜ், காா்த்திகேயன், ஆய்வாளா் ரம்யா, அலமேலு, சிவராமகிருஷ்ணன், திருக்கோயில் அறங்காவலா்கள், அடியாா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.