ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் இளைஞா் திரிவதாக எம்எல்ஏ தென்னரசுவிடம் புகாா் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தென்னரசு புதன்கிழமை உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, மகப்பேறு பிரிவு, மருத்துவமனையின் சமையலறை போன்ற இடங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரங்களில் காவலா்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் கஞ்சா போதையில் மருத்துவமனை வளாகங்களில் சுற்றி வரும் இளைஞா்களால் ஊழியா்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக தலைமை மருத்துவா் ஜெயபாரதி புகாா் தெரிவித்ததோடு, இரவு நேரங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினா.
உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில், தூசி படிந்து இருப்பதை பாா்த்து தூசியை அகற்றி சுத்தப்படுத்த மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, மருத்துவா்கள், தமிழக வெற்றி கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விருதுநகா் அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



