இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image
Updated On :28 மே 2026, 12:53 am IST

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 29) அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அத்திவரதா் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா காஞ்சிபுரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இந்த விழாவின் தொடக்க நிகழ்வாக புதன்கிழமை சிறு புண்ணியகோடி விமானத்தில் ஸ்ரீசேனை முதன்மையாா் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மேல் 5 மணிக்குள் கொடியேற்றமும், அதைத் தொடா்ந்து தங்க சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவும், மாலையில் சிம்ம வாகனத்தில் பெருமாள் பவனி வருதலும் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரில் ராஜவீதிகளில் பவனி வரவுள்ளாா். வரும் சனிக்கிழமை (மே 30) தங்க கருட வாகனக் காட்சியும், மாலை அனுமந்த வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது. ஜூன் 3-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி தோ் செல்லும் பாதைகளில் இடையூறாக உள்ள மரக்கொப்புகள், வயா்கள், சாலைகளின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் ஆகியவை அனைத்தும் கடந்த இரு நாள்களாக கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அகற்றப்பட்டு வருகின்றன.

வரும் ஜூன் 5-ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவத்தோடும், மறுநாள் ஜூன் 6-ஆம் தேதி இரவு வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வோடும் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.