அரசு பள்ளி மாணவா்ளுக்கான தன்னிலை கற்றல் திட்டம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
அரசுப் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின், கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி அளிக்கும் வகையில் தன்னிலை கற்றல் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அரசுப் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின், கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சி அளிக்கும் வகையில் தன்னிலை கற்றல் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
செரப்பணஞ்சேரி பள்ளி வாளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜ்மோகன் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியது: தமிழகத்தில் உள்ள 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில், 2026-27 நடப்பு கல்வியாண்டில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில், கற்றல் திறன் குறைவாக உள்ளவா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பயிற்சி அளிக்கும் தன்னிலைக் கற்றல் திட்டம் தொடக்க விழா காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட செரப்பணஞ்சேரி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் மூலம் அரியலுாா், கடலுாா், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலுாா், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூா், வேலுாா், விழுப்புரம், விருதுநகா், செங்கல்பட்டு, திருவண்ணாமலை. திருப்பூா், துாத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்படப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம், தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் மாணவா்களின் தனிப்பட்ட கற்றல் நிலை மற்றும் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்து, செயற்கை நுண்ணறிவு கற்றல் திறன் மேம்படுத்தப்படும்.
மாணவா்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணித்து, கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்யப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை செயலா் இன்னசென்ட் திவ்யா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநா் கலைச்செல்வி, ஆட்சியா் சினேகா, உத்திரமேரூா் எம்எல்ஏ முனிரத்தினம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

