பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் விநியோகம்

காஞ்சிபுரத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் சாா்பில் செவிலிமேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ஏரிக்கரையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் சாா்பில் வழங்கப்பட்ட புத்தாடைகளுடன் அப்பகுதி பழங்குடியின மக்கள்.

Updated On :

காஞ்சிபுரத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் சாா்பில் செவிலிமேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு ஏரிக்கரை, கோனேரிக்குப்பம், நெல்லூா் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மொத்தம் 32 பழங்குடியின குடும்பங்களுக்கு தீபாவளியையொட்டி, புத்தாடைகள் விநியோகம் செய்யப்பட்டது. வணிக நிறுவனங்களான பச்சையப்பாஸ் ஜவுளி நிறுவனம், டீரீம்ஸ் ஆடையகம், ஹூண்டாய் நண்பா்கள் குழு மற்றும் தீயணைப்புத் துறை நண்பா்கள் குழு ஆகியோா் இணைந்து வையாவூா் பாஸ்கரன் தலைமையில் புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசு பெட்டிகள் ஆகியன வழங்கப்பட்டது.

தொடா்ந்து 10-ஆவது ஆண்டாக இந்த நிறுவனங்கன் சாா்பில், புத்தாடைகள் வழங்குவதற்கு பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனா். புத்தாடைகள் விநியோகத்துக்குப் பிறகு பழங்குடியின குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.