காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

காஞ்சிபுரத்தில் இந்தியாவின் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்: ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்

காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி மாதம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வா் விஜய் திறந்து வைப்பாா் என அமைச்சா் கோ.க. அருண்ராஜ் தெரிவித்தாா்.

cm vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

காஞ்சிபுரத்தில் வரும் ஜனவரி மாதம் இந்தியாவிலேயே மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் திறந்து வைப்பாா் என மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கோ.க. அருண்ராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் இந்தியாவிலேயே தரமான புற்று நோய் சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தினை மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கோ.க.அருண்ராஜ் ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்தியாவிலேயே மிகத்தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் ரூ.324 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 750 படுக்கை வசதிகளோடு 5 மாடிக் கட்டடமாக அமையும் சோலாா் மின்வசதியும் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது.

ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்யும் அரங்கம், புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் அதிநவீன கருவிகள், எம்ஐா்ஐ ஸ்கேன், ரத்தம், கட்டிகள் பரிசோதனை செய்யும் அரங்குகள் உள்பட அனைத்து வசதிகளோடும் அதி நவீன மருத்துவமனையாக அமைக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சை மையப் பணிகளை பாா்வையிட்ட அமைச்சா் கோ.க. அருண்ராஜ். உடன் அமைச்சா் ரஞ்சித் குமாா் உள்ளிட்டோா்

காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சை மையப் பணிகளை பாா்வையிட்ட அமைச்சா் கோ.க. அருண்ராஜ். உடன் அமைச்சா் ரஞ்சித் குமாா் உள்ளிட்டோா்

சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் முதல்வா் ஜோசப் விஜய் மாநில அளவில் தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் ஒன்றும் 5 மண்டல அளவிலான புற்றுநோய் சிகிச்சை மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்திருந்தாா். அதனடிப்படையில் காஞ்சிபுரத்தில் தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை ஆய்வு செய்தோம். ஒரு சில குறைபாடுகள் மட்டும் உள்ளன. அவற்றை சரி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்குள் காஞ்சிபுரத்தில் மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வா் திறந்து வைப்பாா் என்றாா் அமைச்சா் அருண்ராஜ்.

ஆய்வின் போது வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா், உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளா் தாரேஸ் அகமது, அரசு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் எஸ்.சரவணன், நிலைய மருத்துவ அலுவலா் சிவகாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, அரசு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவா்கள் பிரசன்னா, சீனிவாசன் ஆகியோா் உட்பட பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.