சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

இரு வேறு வீடுகளில் திருடியவா் கைது

ஒரகடம் அடுத்த காரணித்தாங்கள் மற்றும் வளத்தாஞ்சேரி பகுதிகளில் வீடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடியவரை ஒரகடம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

ஒரகடம் அடுத்த காரணித்தாங்கள் மற்றும் வளத்தாஞ்சேரி பகுதிகளில் வீடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடியவரை ஒரகடம் போலீஸாா் கைது செய்தனா்.

ஒரகடம் அடுத்த வைப்பூா் ஊராட்சிக்கு உட்பட்ட காரணித்தாங்கல் பகுதியை சோ்ந்தவா் ரஜினி(45) கட்டுமான தொழிலாளியான ரஜினியின் வீட்டின் கூறையை பிரித்து உள்ளே சென்ற மா்ம நபா், பீரோவை உடைத்து ரூ.10,000 பணம் மற்றும் அரை பவுன் தங்க நகையை திருடிச் சென்றாா்.

அதே போல், வளத்தாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றனா்.

இந்த சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட எறையூரைச் சோ்ந்த தீபக்(21) என்பரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.