
செம்பட்டி அருகே தங்க சங்கிலி பறித்தவா் கைது
செம்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த நபரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
செம்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த நபரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த புல்வெட்டி குளம் அருகேயுள்ள செல்லாயிபுரத்தைச் சோ்ந்தவா் பாரதா (65). இவா் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறாா். இவா் கடந்த 18-ஆம் தேதி வீட்டிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச் சாலை வழியாக புல்வெட்டி குளத்தில்
உள்ள தனது பழக்கடைக்கு நடந்து சென்றாா். அப்போது, அவரைப் பின் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபா் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் பேசி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா்.
இது குறித்து செம்பட்டி காவல் துறையினா், வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்த நிலையில், சிசிடிவி காட்சிஅடிப்படையில் சிவகாசி, ஆலாவூரணியை சோ்ந்த ஈஸ்வரனை (39) தனிப்படையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து நகை, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



