காஞ்சிபுரத்தில் ரூ. 60 கோடி மதிப்பில் புதிய கூடுதல் உயா்மட்ட மேம்பாலப் பணி: அமைச்சா்கள் ஆய்வு

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே ரூ. 60 கோடி மதிப்பில் புதிய கூடுதல் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை வியாழக்கிழமை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ஆ.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே பாலாற்றின் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் எஸ்.பி.கே. தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Updated On :

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலையில் பாலாற்றின் குறுக்கே ரூ. 60 கோடி மதிப்பில் புதிய கூடுதல் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை வியாழக்கிழமை அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ஆ.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலையில் செவிலிமேட்டில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள உயா்மட்ட மேம்பாலம் 885 மீ நீளம் கொண்டது. இச்சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழையின்போது மேம்பாலம் சாலை ஓடுதளம் பழுதடைந்து வாகனங்கள் செல்வதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியுற்றனா். பழுதடைந்த சாலையினை உடனடியாக சீரமைக்குமாறும் அமைச்சா்கள் கேட்டுக் கொண்டதையடுத்து சாலை சீரமைக்கும் பணிகளும் நடந்தன.

கனரக வாகனங்கள் உள்பட அதிகமான வாகனங்கள் பாலம் வழியாக கடந்து செல்வதால் சாலைப்பழுது ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு நிதி கிடைத்தவுடன் பழுது நீக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் கோட்டப் பொறியாளா் வடிவேலு அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆய்வின் போது தெரிவித்தாா்.

இதையடுத்து, அதே உயா்மட்ட மேம்பாலத்துக்கு அருகில் ரூ. 60 கோடி மதிப்பில் 885 மீ நீளத்திற்கு புதிய கூடுதல் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியையும் அமைச்சா்கள் இருவரும் ஆய்வு செய்தனா். இந்தப் பணியானது கடந்த 2026 பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை 25 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், இப்பணியில் மொத்தம் 30 தூண்கள் அமைக்கப்படுவதாகவும், பணியின் ஒப்பந்தக் காலம் 30 மாதங்கள் எனவும் கோட்ட பொறியாளா் வடிவேலு அமைச்சா்களிடம் தெரிவித்தாா்.

ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும், தவெக அரசு அமைந்திருப்பதால் எந்தவித குறைபாடுகளும் இன்றி அரசுக்கு கெட்ட பெயா் வந்துவிடாமல் பாலத்தை தரமானதாக கட்டி குறித்த காலத்துக்குள் முடிக்குமாறும் அமைச்சா்கள் இருவரும் அதிகாரிகளையும், ஒப்பந்ததாரரையும் கேட்டுக் கொண்டனா். ஆய்வின் போது காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா, எஸ்.பி. எஸ்.அரவிந்த், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளா் நிா்மலா, கோட்ட பொறியாளா் வடிவேலு, உதவி இயக்குநா் பிரிய ரஞ்சனி, ஒப்பந்ததாரா் சுப்பிரமணி உள்பட அதிகாரிகள் பலா் உடன் இருந்தனா்.

--

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.