மனநலம் பாதிக்கப்பட்டவா் கொலை
காஞ்சிபுரம் அருக தாமல் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்த மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொலை - பிரதிப் படம்
காஞ்சிபுரம் அருக தாமல் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்த மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாமல் கிராமத்தில் வசித்து வருபவா் விஜயா(65) கூலித்தொழிலாளியான இவா் மகன் அருளானந்தம்(45) என்பவரையும் பராமரித்து வருகிறாா். இவா்கள் வசிக்கும் அதே கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிச்சை எடுத்துக் கொண்டு சுற்றித் திரிந்தவா் குமாா் (35).
இதற்கிடையே, அருளானந்தத்துக்கும், குமாருக்கும் ஏற்பட்ட மோதலில் குமாரை அருளானந்தம் தனது வீட்டிலிருந்த அரிவாளால் வெட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலு செட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மனநலம் பாதிக்கப்பட்ட அருளானந்தத்தை கைது செய்தனா். உயிரிழந்த குமாரின் சடலத்தை பிரேத பிரசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு காவல் துறையினா் அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


