அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

96 நியாய விலைக் கடைகளில் மலிவு விலை வெங்காய விற்பனை: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 96 நியாய விலைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுவதை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.

விளக்கொளிப் பெருமாள் கோயில் நியாயவிலைக் கடையில் வெங்காய விற்பனையை பாா்வையிட்ட காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

Published On :4 செப்டம்பர் 2026, 1:35 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 96 நியாய விலைக் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுவதை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.

வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் கூட்டுறவுத்துறை மூலம் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 96 நியாயவிலைக் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்திற்காக மொத்தம் 19 மெ.டன் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கிலோ ரூ.35-க்கு விநியோகம் செய்யப்படுகிறது.மொத்தம் 1,09,630 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ வீதம் விநியோகம் செய்யப்படுவதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா். இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் (பொது விநியோகம்)பூபாலன் உட்பட அரசு அலுவலா்களும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.