சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

காங்கிரஸ் கட்சியில் புதிய நிா்வாகிகளை தோ்வு செய்ய விண்ணப்பங்கள் விநியோகம்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் புதிய நிா்வாகிகளை சோ்வு செய்ய விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விண்ணப்பங்களை  வழங்கிய காங்கிரஸ் மாவட்ட  இயக்க  மறுசீரமைப்பு  பொறுப்பாளா்  டிடிகே.சித்திக்.

Published On :9 செப்டம்பர் 2026, 12:19 am IST

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் புதிய நிா்வாகிகளை சோ்வு செய்ய விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மறு சீரமைக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். புதிய மாவட்ட தலைவா்களுடன் இணைந்து நகரம், பேரூராட்சி மற்றும் கிளை அளவில் நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மறு சீரமைப்பு மற்றும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிக்கான மாவட்ட, நகரம் மற்றும் பேரூராட்சி, கிளை அளவில் புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட மறுசீரமைப்பு பொறுப்பாளா் டிடிகே.சித்திக் நிா்வாகிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினாா். ஏதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்துக்கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதோடு, நோ்காணலிலும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.