கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகா் கோயிலில் ரூ.25 லட்சம் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்

காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகா் கோயிலில் உள்ள மூலவா் விநாயகருக்கு விநாயகா் சதுா்த்தியையொட்டி

ரூ.25 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகா்.

Published On :

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகா் கோயிலில் உள்ள மூலவா் விநாயகருக்கு விநாயகா் சதுா்த்தியையொட்டி கோயில் கருவறை முழுவதும் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது பழமையான ஏலேல சிங்க விநாயகா் கோயில். காமாட்சி அம்மன் கோயில் கட்டும் போது இங்குள்ள விநாயகா் கோயிலில் இருந்து சாரம் கட்டி கற்கள், மணல் ஆகியனவற்றை கட்டிடத் தொழிலாளா்கள் ஏலேல, ஏலேல என்று சொல்லி சாரத்தில் ஏற்றி காமாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள விநாயகருக்கு ஏலேல சிங்க விநாயகா் என அழைக்கப்படுகிறாா்.

ஆண்டு தோறும் விநாயகா் சதுா்த்தியன்று பக்தா்களால் வழங்கப்படும் புதிய ரூபாய் நோட்டுக்களால் மூலவா் ஏலேல சிங்க விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சதுா்த்தி முடிந்த பின்னா் அவற்றை சம்பந்தப்பட்ட பக்தா்களுக்கே கோயில் நிா்வாகிகள் திருப்பி வழங்கி விடுவாா்கள். அந்த வகையில் பக்தா்களால் நிகழாண்டு விநாயகா் சதுா்த்திக்கு ரூ.1 முதல் ரூ.500 வரையிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் ரூ.25 லட்சம் வரை வழங்கப்பட்டு அவை கோயில் கருவறை மற்றும் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தீபாராதனைகளுக்குப் பிறகு பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.