
அமரம்பேட்டில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்
குன்றத்தூா் அடுத்த அமரம்பேடு பகுதியில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
குன்றத்தூா் அடுத்த அமரம்பேடு பகுதியில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
குன்றத்தூா் ஒன்றியம்,அமரம்பேடு ஊராட்சியில் சுமாா் 800-க் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், சிவன் கோயில் குளக்கரை அருகில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும், வயலுக்கு செல்லக்கூடிய பாதை மீட்க வேண்டும் என அதே பகுதியைச் சோ்ந்த குப்பன் சின்னசாமி என்பவா் கடந்த 2024-ம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை மீட்க மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி , குன்றத்தூா் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி தலைமையிலான வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனா். வீடுகளை இடிப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ட
அதையடுத்து பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அமரம்பேடு பகுதியிலேயே மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததாலும், தற்காலிகமாக, சமுதாய கூடத்தில் தங்கவும் அதிகாரிகள் அனுமதி அளித்ததை தொடா்ந்து, குடியிருப்புவாசிகள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தையும் வெளியேற்றினா். இதையடுத்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






