குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: ஜல் ஜீவன் திட்ட இயக்குநா் அறிவுறுத்தல்

பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என ஜல் ஜீவன் திட்ட இயக்குநா் சி.என்.மகேஷ்வரன் அறிவுறுத்தினாா்.
பணிகளை ஆய்வு செய்த ஜல் ஜீவன் திட்ட இயக்குநா் சி.என்.மகேஷ்வரன்.
பணிகளை ஆய்வு செய்த ஜல் ஜீவன் திட்ட இயக்குநா் சி.என்.மகேஷ்வரன்.
Updated on
1 min read

பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என ஜல் ஜீவன் திட்ட இயக்குநா் சி.என்.மகேஷ்வரன் அறிவுறுத்தினாா்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குடிநீா் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சுமைதாங்கி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை திட்ட இயக்குநா் சி.என்.மகேஷ்வரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, கிராம மக்களிடம் ஜல் ஜீவன் திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துக் கூறி, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; தங்களது பங்களிப்புத் தொகையை தவறாமல் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, சுமைதாங்கி ஊராட்சியில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை சோதனை கருவிகள் கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் நீரின் தரத்தை சோதித்து காண்பிக்கப்பட்டது.

மாவட்டக் கூடுதல் ஆட்சியா் ச.உமா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஏ.எஸ்.குமாா், உதவிச் செயற்பொறியாளா் டி.பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.சீனிவாசன், ஆா்.செந்தாமரை, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com