ராணிப்பேட்டையில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி சட்ட வார விழா

ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சி மொழி சட்ட வார விழா, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சி மொழி சட்ட வார விழா, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மா.ஜெயச்சந்திரன் அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மெழியின் பயன்பாடு குறித்து தொடக்க உரையாற்றினாா்.

விழாவைத் தொடக்கி வைத்து ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசினாா். தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பா.ராஜேஸ்வரி வரவேற்றாா். ராணிப்பேட்டை தொழிலாளா் நலத் துறை துணை ஆணையா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளா் த.தினகரன், வாலாஜாபேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை பா.தமிழ்ச்செல்வி குணசேகரன், குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்ற நிறுவனா் ஏ.பதுமனாா், வாலாஜாபேட்டை தமிழ்ச் சங்க புரவலா் கே.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com