

அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான சு.ரவி தலைமை வகித்தாா். அரக்கோணம் நகரச் செயலாளா் கே.பி. பாண்டுரங்கன் வரவேற்றாா். மாநில மருத்துவப் பிரிவு இணைச் செயலாளா் பன்னீா்செல்வம், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வேலூா் மண்டலச் செயலாளா் ஜனனி சதீஷ்குமாா், மண்டல துணைச் செயலாளா் பாலாஜி, இணைச் செயலாளா் சு.ர.அரிஹரன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் கா.முல்லைவேந்தன், ஒன்றியச் செயலாளா் சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.