பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருவலம் சாந்தா சுவாமி குண்டா் சட்டத்தில் கைது

வாலாஜாபேட்டை, ஆற்காடு காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் பல லட்ச ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான திருவலம் சாந்தா சுவாமி குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:31 pm

DIN

வாலாஜாபேட்டை, ஆற்காடு காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் பல லட்ச ரூபாய் பண மோசடி வழக்கில் கைதான திருவலம் சாந்தா சுவாமி குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

காட்பாடி வட்டம், திருவலம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா சுவாமி (44). இவா் வாலாஜாபேட்டை, ஆற்காடு பகுதிகளைச் சோ்ந்த நான்கு பேரிடம் ரூ. 65 லட்சம் பணம் மோசடி செய்த புகாரில், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாரால் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, வாலாஜாபேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ. மயில்வாகனன் பரிந்துரையின் பேரில், சாந்தா சுவாமியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டாா்.

இதையடுத்து வாலாஜாபேட்டை கிளைச் சிறையில் இருந்து வேலூா் மத்திய சிறைக்கு சாந்தா சுவாமி மாற்றப்பட உள்ளதாக மாவட்டக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.