வாலாஜாபேட்டை அருகே 15 டன் ரேசன் அரிசி கடத்திய லாரி பறிமுதல்

வாலாஜாபேட்டை அருகே 15 டன் ரேசன் அரிசி கடத்திய லாரி பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின்பேரில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின்பேரில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாலாஜா பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காஞ்சிபுரத்திலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூரை நோக்கி வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதில் 15 டன் ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது. மேலும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் முத்து 26 மற்றும் கிளீனர் சந்தோஷ் 19 ஆகியோரை பிடித்து பிடித்து விசாரணை செய்ததில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு சொந்தமான லாரி காஞ்சிபுரத்தில் இருந்து ரேஷன் அரிசி பெங்களூருக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர்.

மேலும் காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து லாரி உரிமையாளர் சுந்தர் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக செல்லமுத்து(24), சந்தோஷ்(26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com