காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டையில் பிரசவித்த தாய், சேய் மரணம்: உறவினர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய், சேய் மரணமடைந்ததையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
ஆரம்ப சுகாதார நிலையம் முனபு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.
Updated On :28 செப்டம்பர் 2020, 4:15 am

DIN

ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய், சேய் மரணமடைந்ததையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அர்ச்சனாவுக்கு ஞாயிறுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்படவே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதையடுத்து நள்ளிரவில் பிரசவித்த தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவல், அறிந்து திரண்ட அர்ச்சனாவின் உறவினர்கள் இரவு பணியில் மருத்துவர் இல்லாததால், செவிலியர், ஊழியர்கள் பிரசவம் பார்த்ததால்தான் தாய், சேய் மரணமடைந்ததாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு இறந்த தாய், சேய் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து எம்எல்ஏ ஆர்.காந்தி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.  இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.