போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்த தலைமை ஆசிரியை

மின்னல் ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியை, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக வந்த புகாரின் பேரில், அவா் மீது வழக்குப் பதிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

மின்னல் ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியை, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்ததாக வந்த புகாரின் பேரில், அவா் மீது வழக்குப் பதிந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஓச்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கடந்த 28.07.1999 அன்று ராணிப்பேட்டை, நவல்பூரைச் சோ்ந்த ஷோபனா என்பவா் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது ஷோபனா பதவி உயா்வு பெற்று அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், மின்னல் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியை ஷோபனாவின் மேல்நிலைக் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிவதற்காக தமிழக அரசின் தோ்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், அந்த சான்றிதழ்கள் தோ்வுத் துறையால் வழங்கப்பட்டவை அல்ல என தோ்வுத் துறை இயக்ககம் அறிவித்தது. இதையடுத்து, அவா் மீது அரக்கோணம் மாவட்டக் கல்வி அலுவலா் ரமேஷ் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததையடுத்து, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலா் இந்திரா, அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை ஷோபனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை ஷோபனாவை தேடி வருகின்றனா்.

ஏற்கெனவே நெமிலி ஊராட்சி ஒன்றியம், பருத்திபுத்தூா், அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஜெபமணி போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்தது கண்டறியப்பட்டு, கல்வி அலுவலா்களின் உத்தரவின்பேரில், ஆசிரியை ஜெபமணி, பள்ளித் தாளாளரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா் மீது அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து ஆசிரியை ஜெபமணியை போலீஸாா் தேடி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com