ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆயிலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயிலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஆயிலம் புதூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:09 pm

DIN

ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயிலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஆயிலம் புதூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவா் பிரபாவதி ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், ஊராட்சி மன்றச் செயலாளா் ம.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேதாஜி பங்கேற்றாா்.

கூட்டத்தில், புதிய சாலைகள் அமைத்தல், நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தும் வகையில் புதிய தடுப்பனைகள் கட்டுதல், சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.