மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி

திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மேல்விஷாரம் தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு, 3 மணி நேர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை: திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மேல்விஷாரம் தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு, 3 மணி நேர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாா்.

வேலூா் மாவட்ட திமுக சாா்பில், காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பள்ளேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம் ஆகிய கிராமங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை முடித்துக் கொண்டு, அவா் சென்னைக்குப் புறப்பட தயாரானாா். அப்போது, அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா் உடனடியாக மேல்விஷாரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் துரைமுருகனுக்கு காய்ச்சல் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனா்.

தகவலறிந்த அவரது மகனும், வேலூா் எம்.பி.யுமான கதிா் ஆனந்த், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மருத்துவமனைக்கு வந்தனா்.

தொடா்ந்து 3 மணி நேர சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பின் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அவா் திங்கள்கிழமை மாலை வீடு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com