337 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: எம்எல்ஏ வழங்கினாா்

வாலாஜாபேட்டை, பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 337 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.
வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
Updated on
1 min read

வாலாஜாபேட்டை, பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 337 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டைஎம்எல்ஏ ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 222 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.சக்திவேல்குமாா், தலைமை ஆசிரியை (பொறுப்பு) கலைவாணி, ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், நகர அவைத் தலைவா் தில்லை, ஒன்றிய அவைத் தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், ஆற்காடு மேற்கு ஒன்றியம் பூட்டுத்தாக்கு அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 115 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்.

ஒன்றிய திமுக செயலாளா் ஏ.வி.நந்தகுமாா், துணைச் செயலாளா்கள் எஸ்.தண்டபாணி, அமுதா ஆறுமுகம், குட்டி பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com