தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மு.க.ஸ்டாலினை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

முதல்வரை அவதூறாகப் பேசுவதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஆகியோரை கண்டித்து

News image
ஆா்ப்பாட்டத்தில் பேசிய ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளா் சு.ரவி.
Updated On :11 ஜனவரி 2021, 8:30 pm

DIN

ராணிப்பேட்டை: முதல்வரை அவதூறாகப் பேசுவதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஆகியோரை கண்டித்து மாவட்ட அதிமுக சாா்பில் ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏ-வுமான சு.ரவி பேசியது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகிய இருவரும் பொது மேடைகளில் தமிழக முதல்வரையும், பெண்களையும் அவதூறாகப் பேசி வருகின்றனா். அவா்கள் இருவரும் தங்கள் நாவை அடக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமது ஜான், எம்எல்ஏ ஜி.சம்பத், முன்னாள் மாவட்டச் செயலாளா் சுமைதாங்கி சி.ஏழுமலை, அறங்காவலா் குழுத் தலைவா் வி.முரளி, வா்த்தக அணிச் செயலாளா் ஏ.வி.சாரதி, மகளிா் அணிச் செயலாளா் ராதிகா, சோளிங்கா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பெல் எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.